இந்தியா தொடர்ந்தும் ஈரானிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்தால்,பொருளாதார தடை விதிக்க வேண்டி ஏற்படுமென அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளிண்டன்,கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். இந்தியா உட்பட 11 நாடுகளுக்கு ஹிலரி கிளிண்டன், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்தியா உட்பட 11 நாடுகள், ஈரான் எரிபொருளை இறக்குமதி செய்வதை வரையறுக்கவோ, இடைநிறுத்தவோ இல்லை. இதனால், மேலும் 180 நாட்களுக்குள், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த தவறினால், பொருளாதார தடை விதிக்க வேண்டி ஏற்படுமென, அமெரிக்க வெளியுறவு அமைச்சின் தகவல் இணைப்பு அதிகாரி விக்டோரியா நூலன் தெரிவித்துளளார்.
எதிர்வரும ஜூன் மாத இறுதிக்குள் இந்தியா, ஈரானிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதை வரையறுக்காவிட்டால், அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக பொருளாதார தடையை விதிக்க வேண்டி ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment