கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி வளாக விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் 25பேர் கற்கைகள் நிறுவக உணவு விடுதியில் உணவு உட்கொண்டதை அடுத்து திடீர் சுகவீனமுற்ற நிலையில் இன்று மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் உட்கொண்ட உணவு விசமானதை அடுத்தே இவர்கள் சுகவீனமுற்றுள்ளனர் என்று மட்டக்களப்பு மேற்பார்வை பொது சுகாதார பரிசோதர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த உணவு விடுதியை நிரந்தரமாக மூடிவிடுமாறு நிறுவகத்தின் நிர்வாகம் உத்தர விட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
No comments:
Post a Comment