இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் அனுப்பிவைத்தார் சம்பந்தன்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் ரா.சம்பந்தன், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவலை ஊடகமொன்றுக்கு உறுதிப் படுத்தியுள்ள ரா.சம்பந்தன், அதில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் குறித்த தகவல் வழங்க மறுத்துள்ளார்.
சில குறிக்கோள்களுக்காக இவ்வாறான நகர்வுகளை முன்னெடுக்கும் போது, அது குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு வழங்க முடியாது என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment