கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, தொடர்ந்தும் அரசாங்கம் காலதாமதம் செய்வதன் காரணமாக நாடு பல நெருக்கடிகளை முகம்கொடுக்க வேண்டியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மன் கிரியல்ல முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சர் மகிந்த சமரசிங்க பதிலளிக்கையில், முதலில் நாடு எனவும், நாட்டிற்காக எந்த சவால்களையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல. ஜெனீவா மனித உரிமைகள் தொடர்பான கூட்ட தொடரில், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவே குற்றம் சுமத்தப்படுகிறதே அன்றி நாட்டிற்கு எதிராக அல்லவென்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் லாபங்களை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே ஐக்கிய தேசிய கட்சி இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத் தொடரில் கலந்து கொண்ட இலங்கைக் குழுவின் தலைவர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment