இலங்கை தற்போது அருமையான, புதுமையான நாடாக மாறியுள்ளதாகவும், கிராமிய மக்களின் பொருளாதார நிலைமைகளை உயர்த்துவதற்கு அரசாங்கத்தினால் இதுவரை எந்த விதமான முறையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
எரிபொருள் விலை திடீரென அதிகரிக்கவில்லை, ஒரு தடவைதான் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தது.இருந்த போது, இலங்கை சந்தையில் பொருட்களின் விலைகள் பல மடங்குகளாக அதிகரித்துள்ளன.
இவ்வாறான நிலையில் கிராமிய, வறிய பொதுமக்கள் எவ்வாறு சுமூகமாக வாழ முடியும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment