Friday, March 2, 2012

தேசிய பொலிஸ் ஆணைக்குழு, மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது


தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சேனக வல்கம்பாய நியமிக்கப்பட்டுள்ளதோடு ஆணைக்குவும் இயங்க ஆரம்பித்துள்ளது.

சங்கைக்குரிய எல்லே குணவங்ச தேரர், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் டி. திசாநாயக்க, சட்டத்தரணி பாமன் மதுரசிங்க, கட்டிடக்கலை நிபுணர் ஆர். சிவராமன் ஆகியோர், இந்த ஆணைக்குழுவில் ஏனைய உறுப்பினர்களாகவுள்ளனர்.

மேலும் இதில் கணக்கியலாளர் எம்.எம்.எம். மௌஜூத் மற்றும் மியன்மாருக்கான முன்னாள் தூதுவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான நியூட்டன் குணரட்ன ஆகியோரும், குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர் இணைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு, 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் திகதி முதல், இதுவரை செயலிழந்து காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment