Thursday, March 1, 2012

இரண்டாவது திருமணம் முடித்து தேனிலவுக்கு வந்த பெண் கணவரால் கொலை

கொழும்பு, கொள்ளுபிட்டி ரேணுகா ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் பெண்ணின் கொலை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் இன்று (1) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை சம்பவம் இடம் பெற்ற இடத்தில் நடத்தப்பட்ட இரசாயணப் பகுப்பாய்வு விசாரணைகளை அடுத்து , சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொள்ளுபிட்டி 5ம் குறுக்கு வீதியில் வசிக்கும் தமிழர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 48 வயதான கனகசபை சுதர்ஷினி சஹீலா என்பவரே கொலை செய்யப்பட்டவராவார்.

திருமணம் முடித்து பிரித்தானியாவில் கணவருடன் வாழ்ந்து வந்த கனகசபை சுதர்ஷினி சஹீலா பிரித்தானியாவில் தனது முதல் கணவர் தன்னை கைவிடவே இலங்கைக்கு வந்துள்ளார்.

இலங்கையில் அவர் கொள்ளுபிட்டி பகுதியில் வசித்து வந்த வேளை, அங்குள்ள தமிழ் இளைஞனை இரண்டாம் திருமணம் செய்துள்ளார்.

இவ்விருவரும் முதல் இரவுக்காக கொள்ளுபிட்டி ஹோட்டலில் தங்கியிருந்த போதே கணவரால் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரியவந்துள்ளன.

குறித்தப் பெண்ணின் நகை , பணம் என்வவை பாதுகாப்பாக ஹோட்டல் அறையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com