அகில இலங்கை குவாஸி மேல் முறையீட்டு சபையின் முன்னாள் தலைவரின் மறைவுக்கு அனுதாபம்
அகில இலங்கை குவாஸி மேல் முறையீட்டு சபையின் முன்னாள் தலைவரும் , நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபருமான அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ.ஜப்பாரின் மறைவுக்கு(76வயது) கம்பஹா மாவட்ட முஸ்லிம் விவாகப் பதிவாளர் சங்கம் அனுதாப செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
மர்ஹூம் ஜப்பார் நீர்கொழும்பு வாழ் மக்களுக்கும் , பிரதேச மக்களின் கல்வித்துறையின் முன்னேற்றத்துக்கும் ஆற்றியுள்ள சேவைகள் தொடர்பாக அந்த செய்திக்குறிப்பில் குறித்துக்காட்டப்பட்டுள்ளது .
அந்த அனுதாப செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
கடந்த சனிக்கிழமை (25) இறையடி எய்திய மர்ஹும் ஜப்பார் நீர்கொழும்பு ஆமினுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவராகவும் ,ஸைலான் சர்வதேச பாடசாலையின் தலைவராகவும் இருந்து சமூகத்துக்கு பெரும் சேவை புரிந்துள்ளார் .
அவர் முன்னாள் நீர்கொழும்பு பகுதி காதியாக (குவாஸியாக )இருந்த காலப்பகுதியிலும் பின்னர் கம்பஹா மேல் முறையீட்டு குவாஸியாக இருந்த காலத்திலும் கம்பஹா மாவட்ட முஸ்லிம் விவாகப்பதிவாளர் சங்க பதிவாளர்களுக்கு ஆலோசனை வழங்குபவராக இருந்துள்ளார் . அத்துடன் முஸ்லிம் விவாகப்பதிவாளர்களுக்கு நடத்தப்பட்ட கருத்தரங்குகளிலும் பங்கு பற்றி ஆலோசனைகளையும் அனுபவப்பகிர்வுகளையும் வழங்கியுள்ளார்.
.இவரது மாணவர்கள் பலர் சமூகத்தில் உயர்ந்த பதவிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும் என்று அந்த அனுதாப செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது .
நீர்கொழும்பு வாழ் மக்களுடன் இணைந்து அவரின் ஆத்மாவுக்காக வேண்டி பிரார்த்திப்பதாகவும் அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதாகவும் அந்த அனுதாப செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
0 comments :
Post a Comment