மாவத்தகம தோட்டப் பிரதேசத்தில் சர்வோதய அபிவிருத்தி வங்கியில் வைப்புச் செய்தவதற்கு வழங்கிய 90 இலட்சத்திற்கு அதிகமான பணம், அந்த வங்கியில் வைப்புச் செய்யப்பட வில்லை என்று கணக்கு வைப்பாளர்கள் மூலம் முன் வைக்கப்பட்ட முறைப்பாடை அடுத்து குருநாகல் விசேட குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.
ஒரு இலட்சம் முதல் 10 இலட்சம் வரையான பணத்தை வைப்புச் செய்த கணக்கு வைப்பாளர்கள் 23 பேர், இதுவரையில் குருநாகல் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
தோட்ட அபிவிருத்தி வங்கியின் முகாமையாளர் மற்றும் சர்வோதய அபிவிருத்தி வங்கியின் குருநாகல் மாவட்ட அலுவலகத்தின் வெளிக்கள உத்தியோகஸ்தர் ஆகியோர், இந்த நிதி மோசடி தொடர்பில் சந்தேகிக்கப்படுபவதாக குருநாகல் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் விளக்கமளித்தனர்.
ஏனைய வங்கிகளை விட கூடுதலான வட்டியுடன் வைப்புப் பணத்தின் அளவுக்கேற்ப பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி சந்தேக நபர்கள் இருவரும் வைப்புச் செய்யப்பட்ட பணத்தை பெற்றுக் கொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.வைப்புச் செய்த பணத்திற்குரிய பணம் பெற்றுக் கொண்டதற்கான பற்றுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அது தோட்ட அபிவிருத்தி வங்கியில் கணக்குப் புத்தகத்திலும் மற்றும் லெஜர் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் மேற் கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment