Friday, March 23, 2012

இந்திய அகதி முகாம்களில் வசித்த 73 அகதிகள் நாடு திரும்பினர்

கடந்த பல வருடங்களாக இந்தியாவின் அகதி முகாம்களில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த 73 அகதிகள் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

கடந்த காலங்களில் இலங்கைக்கு வந்த அகதிகளில் இம்முறை அதிகமானவர்கள் ஒரே தடவையில் வந்துள்ளனர்.

கடந்த யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து படகுகள் மூலம் சென்றவர்களில் 21 பெண்கள், 24 ஆண்கள், 28 சிறு பிள்ளைகளும் உள்ளடங்குகின்றனர்.இதில் 10 வயதுக்குட்பட்ட 16 சிறுவர்களும் காணப்படுகின்றனர்.

இவ்வாறு வருகைத் தந்தவர்கள் திருகோணமலை,வவுனியா,மன்னார் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர். இவர்கள் ஜக்கிய நாடுகளின் இடம் பெயர்ந்தோருக்கான பிரிவின் உதவியுடன் இங்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கடந்த 15 முதல் 25 வருட காலம் இந்தியாவில் அகதி முகாமில் வாழந்ததாக இவர்கள் தெரிவித்துள்ளதுடன் , மன்னார் தலைமன்னார் ஊடாக இந்தியாவுக்கு சென்றதாகவும் அவர்கள் கூறியுள்ளார்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com