Sunday, March 25, 2012

இலங்கை ஐரோப்பாவில் உள்ள 5 தூதரகங்களை மூடுகிறது

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஐரோப்பிய நாடுகளில் உள்ள தூதரகங்கள் பலவற்றை மூடிவிட அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பெல்ஜியத்தில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கான தூதரகங்களைத் தொடர்ந்து பேணுவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நோர்வே , சுவீடன், நெதர்லாந்து. போலந்து, ஒஸ்ரியா ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களே மூடப்படவுள்ளன.

இதேவேளை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகள் சிலவற்றில் புதிய தூதரகங்களை இலங்கை திறக்கவுள்ளது.

குறிப்பாக உகண்டா மற்றும் கொங்கோ ஆகிய நாடுகளில் உடனடியாக தூதரகங்களைத் திறக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments:

Post a Comment