ஆபாசப்படங்களுடன் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம்
கையடக்க தொலைபேசியில் 105 ஆபாசப்படங்களை வைத்திருந்த யாழ்.இளைஞனுக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து பருத்தித்துறை நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்த சேகரம் தீர்ப்பளித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு உடுப்பிட்டி ஹோட்டலுக்கு முன்னால் சோதனையில் ஈடுபட்டிருந்த வல்வெட்டித்துறைப்பொலிஸாரே மேற்படி இளைஞரை கைது செய்தனர்.
இவரது கையடக்க தொலைபேசியை சோதனை செய்து பார்த்த போது கையடக்க தொலைபேசியியல் 105 ஆபாசப்படங்களை வைத்திருப்பதை பொலிஸார் கண்டு பிடித்தனர்.
இவரை நீதிமன்றில் நிறுத்திய போது நீதிபதி அவரிடம் விசாரணை மேற்கொண்டார் இதன்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து குற்றவாளிக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து நீPதிவான் தீர்ப்பளித்தார்.
0 comments :
Post a Comment