Saturday, March 3, 2012

எரிபொருள் விலையேற்றம் கண்டித்து 5 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி

எரிபொருள் விலையேற்றம் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் அதிகரிப்பு ஆகியவற்றைக் கண்டித்தும் மேற்படி விலைகளையும் கட்டணங்களையும் உடனடியாக குறைக்குமாறு வலியுறுத்தியும் தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரிய ஆர்ப்பாட்ட எதிர்ப்புப் பேரணி வரும் 5 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் பிற்பகல் 4 மணியளவில் ஆரம்பமாகும் எதிர்ப்பு பேரணியில், நாட்டில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள், அமைப்புகள் கலந்து கொள்ளவிருப்பதாக தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் கே.டி.லால்காந்த தெரிவித்தார். நாட்டிலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இதில் கலந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் மேற்படி ஆர்ப்பாட்ட எதிர்ப்புப் பேரணிக்கும் ஜே.வி.பி. கட்சிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது எனத் தெரிவித்த லால்காந்த உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் ஏற்றி வைக்கப்பட்டுள்ள வாழ்க்கைச் சுமையை இறக்கி வைப்பதற்காகவும் நடத்தப்படுகின்ற எதிர்ப்பு நடலடிக்கை இதுவென்றும் அவர் விளக்கமளித்தார்.

கொழும்பு தேசிய நூலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com