செனல் 4 தொலைக்காட்சியினால் காண்பிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களம்காணொளியின் காட்சிகள் திட்டமிட்டு சித்தரிக்கப்பட்டவை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடக பேச்சாளர் தயா மாஸ்ட்டர் தெரிவித்துள்ளார்.
2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த காலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒளிப்பதிவுகள் திரிபுபடுத்தப்பட்டு சர்வதேச ரீதியாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஐ.ரி.என். தொலைக்காட்சியில் தயா மாஸ்டர் கூறியுள்ளார்.
இறுதி யுத்தத்தில் இடம்பெறாத பல விடயங்கள் இந்த காணொளியில் போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், இது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்.ரி.ரி.ஈ. தலைவர் பிரபாரகனின் 12 வயதான மகன் பாலச்சந்திரன் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக சனல் 4 அலைவரிசையின் புதிய வீடியோவில் குற்றம் சுமத்தப்படுவது தொடர்பாக தயா மாஸ்டர் கூறுகையில். எல்.ரி.ரி.ஈ. காவலர்களின் கடும் பாதுகாப்பில் பாலச்சந்திரன் இருந்ததாகவும், அவர் தப்பியோட முயற்சித்தபோது எல்.ரி.ரி.ஈ. காவலர்களால் சுடப்பட்டிருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment