“இலங்கையின் கொலைக்களம் - தண்டிக்கப்படாத யுத்தக் குற்றங்கள்” என்ற செனல் 4 தொலைக்காட்சியின் காணொளி இன்றைய தினம் வெளியாகவுள்ளது.
பிரித்தானிய நேரப்படி இன்று இரவு 10.55 மணி அளவில் இந்த காணொளி ஒளிபரப்பாகவுள்ளதாக செனல் 4 தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த காணொளியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வன், பாலசந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக இந்த காணொளியில் இறுதி யுத்ததின் செய்மதி படங்கள் பலவற்றை காட்சிப் படுத்தவிருப்பதாக செனல் 4 தொலைக்காட்சியின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment