3 எல்ரிரிஈ சந்தேக நபர்களை தொடர்ந்தும் விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு திட்டம் தீட்டிய போது இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட 3 எல்ரிரிஈ சந்தேக நபர் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பொருளாதார மத்திய நிலையம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இச்சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸாரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை ஆராய்ந்ததைத் அடுத்து கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் அவர்களை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
0 comments :
Post a Comment