புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு இன்று சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உதவும் வகையில் விசேட கடன் திட்டமொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது.
இந்தக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி வைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று காலை வெள்ளவத்தை இராமகிருஷ்ன மிஷன் மண்டபத்தில் நடைபெற்றதாக தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர இன்று முதல் இக்கடன் செயற்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
புதிய கடன் திட்டத்திற்கு அமைய புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்கள் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வரை கடன் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் முதல் வருடத்தில் மாத்திரம் நான்கு வீத வட்டி அறிவிடப்படும் எனவும் 10 ஆண்டுகளுக்குள் கடன் தொகையை மீளச் செலுத்த முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment