2013ம் ஆண்டில் கிளிநொச்சி வரை யாழ்.தேவி சேவையில் ஈடுபடும்
யாழ்.தேவி எதிர்வரும் 2013ம் ஆண்டில் கிளிநொச்சி வரையில் சேவையில் ஈடுபடுமென்றும் இந்தியாவிலிருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட தண்டவாளங்கள் கொண்டு ரயில் பாதை அமைப்பிற்கான பணிகள் துரித கதியில் நடைபெறுவதாக புகையிர திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தடைப்பட்ட வடக்கிற்கான யாழ்.தேவியை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதற்காக நடவடிக்கைகள் மூன்று கட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வவுனியா முதல் ஒமந்தை முதல் ஒரு கட்டபணிகள் நிறைவடைந்து சேவைகள் நடைபெற்றுவருகின்றன. இரண்டாம் கட்டமாக பளை வரையிலான பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.
இதற்காக இந்தியாவிலிருந்து கப்பல் மூலம் தண்டவாளங்கள் கொண்டு வரப்பட்டு ரயில் பாதை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. இதன்படி எதிர்வரும் 2013ம் ஆண்டு யாழ்.தேவி கிளிநொச்சிக்கு கொண்டு வரமுடியும் புகையிர திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment