Thursday, March 15, 2012

நாட்டில் 2 ஆயிரத்து 500 கிராம சேவையாளர்கள் புதிதாக சேவைக்காக சேர்க்கப்படவுள்ளனர்.


உயர்ந்தபட்ச மக்கள் சேவையினை உறுதிப்படுத்தும் வகையில்இ புதிதாக 2 ஆயிரத்து 500 கிராம சேவை உத்தியோகத்தர்களைஇ அரச சேவையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகஇ அமைச்சர் டபிள்யு.டி.ஜே. செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

களுத்துறைஇ தொடங்கொட புதிய மூன்று மாடி பிரதேச செயலகத்தை திறந்து வைக்கும் வைபவத்தில்இ கலந்து கொண்டு உரையாற்றும்போதேஇ அமைச்சர் இவ்வாறு கூறினார்.

பிரதேச மட்டத்தில் உள்ள கிராம சேவை உத்தியோகத்தர்கள்இ மக்களின் பிரச்சினைகளையும்இ தேவைகளையும் நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் சேவையாற்றுபவர்களாவார்கள்

இந்நிலையில் ஒரு சில கிராம சேவை பிரிவுகளில்இ கிராம சேவை உத்தியோகத்தர்கள் இன்மையினால்இ மற்றைய கிராம சேவை பிரிவுகளில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள்இ பதில் கடமையில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலைமையை மாற்றியமைக்கும் முகமாகஇ அரசாங்கம் புதிய கிராம சேவை உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இதன்படி 2000-2500 க்கும் இடைப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்கள்இ புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கிராம சேவை உத்தியோகத்தர் அற்ற கிராம சேவை பிரிவுகளுக்கே நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.


72 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இக்கட்டிடத்திறப்பு விழாவில் . அமைச்சர் குமார வெல்கம உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும்இ இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment