கியூபாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள பாப்பரசர் 16 ஆவது ஆசிர்வாதப்பர் ஹவானா விமான நிலையத்தில் வைத்து கியூபாவிற்கு எதிரான அமெரிக்காவின் 50 ஆண்டுகால வர்த்தகத் தடைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ராவுல் கஸ்ரோ முன்னிலையில் கருத்து தெரிவித்த பாப்பரசர் 16 ஆவது ஆசிர்வாதப்பர் கியூப மக்களுக்கான நியாயமற்ற இந்த தடை பொருளாதார நடவடிக்கைகளுக்கு உதவி புரியாது எனவும் அடிப்படை சுதந்திரம் மறுக்கப்படாத சமூகம் உருவாக்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தலைநகர் ஹாவாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஆராதனையிலும் பாப்பரசர் கலந்து கொண்டதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
No comments:
Post a Comment