1600 தமிழர்கள் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் -கோதபாய தெரிவிப்பு
1600 தமிழர்கள் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும், வடக்கு கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றுவதற்காக இவர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் தற்போது ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ளார். ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி யசூசி அக்காசியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கில் இராணுவத்தின் பிரசன்னம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது எனவும், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புலம்பெயர்ந்து சென்ற பெருமளவிலானவர்கள் நாடு திரும்பி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment