15 நாடுகள் ஆதரவு தெரிவித்தமை திருப்தி : பீரிஸ் பிரேரணை' நிறைவேறியமை வரவேற்பு : TNA
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பதினைந்து நாடுகள் இலங்கைக்கு சார்பாக வாக்களித்தமை பெரும் திருப்தியளிக்கிறது என வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
.அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
'அந்நாடுகள் மீது பல்வேறு வகையில் செலுத்தப்பட்ட கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் 15 நாடுகள் இலங்கைக்காக வாக்களித்தமை எமக்கு பெரும் திருப்தியளிக்கிறது. அந்நாடுகளுக்கு எமது நன்றியையும் ஆழ்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வாக்களிப்பில் கலந்துகொள்ளாததன் மூலம் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க மறுத்த 8 நாடுகளுக்கும் நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.
15 நாடுகள் எதிர்த்மை மற்றும் 8 நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றாத நிலையில் இறுதிமுடிவானது 47 அங்கத்தவர்களைக்கொண்ட மனித உரிமைகள் பேரவையில் 23 நாடுகள் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. 24 நாடுகள் அதை ஆதரித்தன. இவற்றுக்கிடையிலான வித்தியாசம் இந்தளவு குறைவானதாகும்.
ஏனைய நாடுகளின் உள் விவகாரங்களில் சக்திவாய்ந்த நாடுகள் தலையிட முடிவதற்கான ஆபத்தான முன்னுதாரணம் ஏற்படுத்தப்படும் ஆபத்து குறித்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த பல நாடுகள் உணர்ந்திருந்தன.
இது எந்த வகையான விதிமுறைகள் அல்லது அளவுகோல்களினால் நிர்வகிக்கப்படாமல் தேர்தெடுக்கப்பட்ட மற்றும் தன்னிச்சையான செயன்முறையாகும்.
இலங்கையைப் பொறுத்தவரை. எமது கொள்கையானது அனைத்து விடயங்ளும் எமது நாட்டு மக்களின் முக்கியமான நலன்களினால் ஆளப்படுவதாக தொடர்ந்துமிருக்கும். இதில் வேறு எந்த வகையான பரிசீலனைகளுக்கும் இடமில்லை.
இதேவேளை, ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் என்பவற்றை ஊக்குவிக்கும் பிரேரணை' நிறைவேற்றப்பட்டதை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
இப்பிரேரணையாது இன வேறுபாடின்றி இலங்கையர் அனைவருக்கும் நன்மையளிக்குமென நாம் நம்புகிறோம்' என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment