Wednesday, March 14, 2012

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு பிணை

தனது வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட 14 வயது சிறுமியை சாக்லட் தருவதாக கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரையும் , அந்த சிறிமியை கொடூரமாக தாக்கிய சந்தேக நபரின் மகளையும் நீர்கொழும்பு நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் தலா 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் , தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார் .

அக்கரப்பனஹ , டயகம பிரதேசத்தை சேர்ந்த சிறுமியே வல்லுறவு செய்யப்பட்டும் கொரூரமாக தாக்கப்பட்டவருமாவார்.

குறித்த சிறுமிக்கு மாதாந்தம் ஏழாயிரம் ரூபா சம்பளமாக தருவதாக கூறி சந்தேக நபர் வேலைக்கு அமர்த்தியுள்ளதாக , சந்தேக நபர்களுக்கு எதிராக கந்தானை பொலிசார் செய்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment