Tuesday, March 27, 2012

காரைதீவில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 120 வது ஜனன தின நிகழ்வு

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 120 வது ஜனன தினத்தையொட்டி அவர் பிறந்த காரைதீவு மண்ணில் பல நிகழ்வுகள் நடைபெற்றன. இன்று செவ்வாய்க்கிழமை காலை காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் பிரதி அதிபர் எஸ்.இலங்கநாதன் தலைமையில் விபுலானந்தவிழா நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட காரைதீவு விபுலானந்த பணிமன்றத் தலைவர் வி.ரி.சகாதேவராஜா, பிரதி அதிபர் இலங்கநாதன், உதவி அதிபர்களான எம்.சுந்தரராஜன், வி.அருட்குமரன், மாணவர் தலைவர்கள் ஆகியோர் சுவாமியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து உரையாற்றுவதையும், ஆசிரியை வாணி சசிகுமார் உரையாற்றுவதையும் மாணவர்களையும் படங்களில் காணலாம்.

படங்கள்:- காரைதீவு நிருபர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com