வடமேல் மாகாணத்தில் 115 கூட்டுறவுத்துறை சேவையாளர்களுக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு
வடமேல் மாகாணத்தில் கூட்டுறவுத் துறையில் உள்ளோர்க்கு ஓய்வூதியம் வழங்கும் செயற் திட்டதின் கீழ் கூட்டுறவு சேவையாளர்கள் 115 பேருக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண முதல் அமைச்சர் அதுல விஜேசிங்க தெரிவித்தார்.
ஓய்வூதிய சம்பள முறைக்கு ஏற்ப இது வரைக்கும் கூட்டுறவு சேவையாளர்கள் 3911 பேர் பதிவு செய்துள்ளனர். இந்தக் கொடுப்பனவு வழங்குவதற்கு மாதாந்தம் 400 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்காக தற்போது 166 கூட்டுறவுச் சங்கங்கள் பதிவு செய்துள்ளன. இந்த வருடத்திற்கான உத்தேச ஓய்வூதிய கொடுப்பனவு நிதி 158 மில்லியன் ரூபாவாகும்.
இந்த நிதியத்திற்கு 100 மில்லியன் ரூபா நிதி வழங்குவதற்கு வடமேல் மாகாண கிராமிய வங்கிகளின் சங்கம் இணங்கியுள்ளது. இதில் 50 மில்லியன் ரூபா தற்போது நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாக முதல் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment