Tuesday, February 14, 2012

USA போய் வாழுங்கள், தீவிரவாதம் வேண்டாம்: பிள்ளைகளுக்கு அட்வைஸ் செய்த ஒசாமா

கொல்லப்பட்ட அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் தனது பிள்ளைகள் தீவிரவாதிகளாவதை விட அமெரிக்க பல்கலைக்கழங்களில் படித்து, அமைதியான வாழ்க்கை வாழ்வதையே விரும்பினார் என்று அவரது மச்சான் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனி்ன் 5வது மனைவி அமாலின் சகோதரர் ஜகரியா அல் சதா தி சன்டே டைம்ஸ் பத்திரிக்கைக்கு கூறியதாவது,

ஐரோப்பா, அமெரிக்காவுக்கு சென்று நன்றாகப் படியுங்கள் என்று பின் லேடன் தனது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளிடம் தெரிவித்தார். தனது பிள்ளைகள் தன்னைப் போன்று தீவிரவாதிகளாகக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

ஒசாமா கொல்லப்பட்ட பிறகு அவரது 3 மனைவிகள் மற்றும் 9 குழந்தைகள் இஸ்லாமாபாத்தில் உள்ள 3 அறைகள் கொண்ட வீட்டில் வைத்து ஐஎஸ்ஐ அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். செப்டம்பர் 11, 2001ம் ஆண்டு தாக்குதலால் தனது குடும்பத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் குறித்து ஒசாமா வேதனைப்பட்டதாக அமால் என்னிடம் தெரிவி்ததார்.

நன்றாகப் படித்து, அமைதியான வாழ்க்கை வாழுங்கள். ஒரு காலத்திலும் தான் செய்ததை தனது குழந்தைகள் செய்யக் கூடாது என்று அவர்களுக்கு லேடன் அறிவுரை வழங்கினார் என்றார்.

லேடன் கொல்லப்பட்டபோது அமாலின் முழங்காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது என்பது குறிப்பிடத்தகக்து. பின் லேடன் ஜெத்தாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக்கழகத்திலும், அவரது சகோதரர்கள் ஹார்வர்டு லா ஸ்கூல், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தி யுனிவர்சிட்டி ஆப் சதர்ன் கலிபோர்னியா மற்றும் பாஸ்டனில் உள்ள டப்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment