கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் இலங்கையை புதிய பாதைக்கு இட்டுச்செல்லுமென நம்பிக்கை தெரிவித்துள்ள அமெரிக்க ராஜாங்க திணைக்கள உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் பிளேக், இலங்கையின் இறுதி இலக்கை எட்டுவதற்கு, பூரண ஆதரவை வழங்கப்போவதாக மீண்டும் தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் இடம்பெற்ற சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்வாறு தெரிவித்துள்ள ரொபர்ட் பிளேக் இவ்வறிக்கையின் மூலம் இலங்கையில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதறகு, வழிசமைக்கப்பட்டுள்ளது எனவும் இலங்கையில் தற்போது பாரிய அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன எனவும் அதன் இறுதி இலக்கை எட்டுவதற்கு, பூரண ஆதரவு அளிக்கப்படுமென, உறுதியாக தெரிவித்ததாக அமெரிக்கவுக்கான இலங்கைத்தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment