அதிகாரப்பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளை, மூட்டை கட்டிவிட்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை பயங்கரவாதத்திற்கு தூபமிடுவோர் எனும் குற்றச்சாட்டின் பேரில், கைது செய்யுமாறு, அரசை வற்புறுத்துவதாக, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலர் புலிப் பயங்கரவாதத்திற்கு துணைபோகும் வகையில் நாட்டை இரத்தக் கலரியாக்குவதற்கு மேற்கொண்ட மிலேச்சத்தனமான முயற்சிகளை, எவராலும் மறந்துவிட முடியாதென தெரிவித்த அவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசத்துரோகிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க, புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென்றும், அவர் அரசாங்கத்தை கோரியுள்ளார்.
No comments:
Post a Comment