அமெரிக்க மேடையில் நடுவிரலைக்காட்டி சர்ச்சையில் மாட்டியுள்ளார் M.I.A
மாதங்கி மாயா அருள்பிரகாசம், மியா (M.I.A) எனும் பெயரில் அமெரிக்காவில் பொப் இசைப் பாடகியாக வலம்வருகின்றார். இவர் அமெரிக்காவின் Indianapolis இல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் Super Bowl XLVI போட்டியின் இடைவேளையில் நடைபெற்ற பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில், உலகப் புகழ்பெற்ற பாடகி மடோனாவுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார்.
இந் நேரடி ஒலிபரப்பினை உலகளாவிய ரீதியில் சுமார் 150 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர். ஆனால் நடன நேரத்தில் அவர் பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்தும் வகையில் காட்டப்படும் நடு விரலைக் காட்டி நடனமாடினார் என்ற சர்ச்சைக்குள் தற்போது சிக்கியுள்ளார். இவரின் இச்செயலுக்காக பிரபல அமெரிக்க தொலைக்காட்ச்சி நிறுவமனான என்.பி.சி, என்.எல்.எப் போன்றவை மன்னிப்புக்கோர நேரிட்டுள்ளது.
சிறுவர்களும் சிறுமியர்களும் கண்டுகழிக்கும் இந்த விளையாட்டுப் போட்டி பாடல் நிகழ்வில் இவர் இவ்வாறு நடந்துகொண்டது பெரும் தவறு என்று அமெரிக்க ஊடகங்கள் கூறியுள்ளது.
இலங்கையரான இவர் புலிகளுக்கு ஆதரவு சேர்க்கும் செயற்பாடுகளில் இறங்கியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகி மடோனா அவர்கள் ஒரு முறை மேடை நிகழ்வு ஒன்றில் தனது மேலாடையைக் களைந்து பாடி, பின்னர் பொலிசாரிடம் கைதானார். மாயாவின் இச் செயல் பெரிய பாரதூரமான குற்றச் செயல் எனத் தெரிவிப்பதுடன் இவர் இக்குற்றத்துக்காக தண்டனை செலுத்தவேண்டிவரலாம் என பலரும் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அமெரிக்காவில் இது குறித்து சூடான விவாதங்கள் பல இடம்பெறுவதால் மாயா இலவசமான பிரபல்யத்தை பெற்றுக்கொண்டுள்ளார் எனவும் இவர் இதை இவ்வாறானதோர் இலவச விளம்பரத்திகாக செய்தாரா என்றும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment