முன்னாள் புலிகளை உல்லாசப்பயணத்துறையில் ஈடுபடுத்த புதிய திட்டம். Maj Gen ராஜகுரு.
எல்ரிரிஈயின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளித்து சமூகமயப்படுத்தும் செயல்த்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ள புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு, இவ்வாறு சமூகமயப்படுத்தும் எல்ரிரிஈ உறுப்பினர்களுக்கு தொழில்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த விடயங்களை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ஒரு தொகுதியினரை நாட்டின் உல்லாச பயணத்துறையில் இணைத்துக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு புனர்வாழ்வு பெற்றோரை சமூகமயப்படுத்தும் நடவடிக்கைகளை நாங்கள் நாட்டின் பல பாகங்களிலும் மேற்கொள்ளவுள்ளோம். சமூகம் இவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற தகவல்களை இதன் ஊடாக வழங்க நாங்கள் முற்பட்டுள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, யுத்தம் முடிவடைந்ததன் பின்னர்; சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட 12 ஆயிரம் எல்ரிரிஈ உறுப்பினர்களில் 10 ஆயிரத்து 500 பேர் இதுவரை சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது 945 பேர் எஞ்சியுள்ளனர்.; இவர்கள் நீதிமன்றத்தின் மூலம் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள்... கடந்த ஜனவரி மாதம் மட்டக்களப்பிலும் இம்மாதம் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியிலும் முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்களை சமூகமயப்படுத்தினோம். மார்ச் மாதம் அநேகமானோர் சமூகமயப்படுத்தப்படவுள்ளனர். இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நாங்கள் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவிடம் மேற்கொண்டுள்ளோம். இவர்களுக்கான தொழிற்பயிற்சிகள் இன்னும் பூர்த்தியாகவில்லை. ...............................
0 comments :
Post a Comment