LLRC அறிக்கையை இலங்கைக்கு எதிராக திருப்பும் முயற்சியில் ஐ.தே.க !
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டினூடாக, தாயகத்திற்கு எதிராக செயற்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் சூழ்ச்சி அம்பலமாகியுள்ளது. கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையில் சில சரத்துகளை குறிப்பிட்டு, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக, செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை, சுட்டிக்காட்டியுள்ளார்.
கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டை ரணில் விக்ரமசிங்க அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் இறுதி நாட்கள் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். மோதல்களின் இறுதி வாரங்களில், யுத்த சூனிய பிரதேசத்தற்கு வருகை தந்த பொது மக்களுக்கு, தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லையென தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, அரசாங்கம் அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏன் தயார் நிலையில் இருக்கவில்லையென, கேள்வி எழுப்பியுள்ளார்.
இது புலம்பெயர் தமிழர்களினதும், சில மேற்கு நாடுகளினதும், இலங்கைக்கு எதிரான கருத்துகளாகும்.
எனினும், போரின் இறுதி நாட்களில், இலங்கை அரசாங்கமும், பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்த தமிழ் மக்கள் மீது காட்டிய மனிதாபிமான செயற்பாடுகளை, இலங்கை அரசாங்கம், முழு உலகிற்கும் எடுத்துக்காட்டியது. இவ்வாறு இருக்கும்போது, ரணில் விக்ரமசிங்க, எல்ரிரிஈ யினருக்கு தேவையான செய்தியை, உலகிற்கு அறிவிக்க, முயற்சிக்கின்றார் என்பது, தெளிவாகின்றது.
யுத்தத்தின் இறுதி காலப்பகுதியில் அழிவையும், நஷ்டத்தையும் குறைப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையென, ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.
கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஏளனத்திற்குட்படுத்தியுள்ள ரணில் விக்ரமசிங்க, வெளிநாட்டு பணத்தை கொண்டு, காலம் கடத்தும் அரச சார்ப்பற்ற அமைப்பான மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தில், பாக்கியசோதி சரவணமுத்து சமர்ப்பித்துள்ள, உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களி;ன காணிகள் மற்றும் சொத்துகளின் உரிமை குறித்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கைக்கு எதிரான பொய்யான தகவல்களை பரப்பிய சனல்-4 காணொளியின் காட்சிகள் தொடர்பாக, சர்வதேச ரீதியாக விசாரணைகளை நடாத்துவதற்கும், பக்க சார்ப்பற்ற விசாரணையொன்றை நடாத்த வேண்டுமென்றும், ரணில் விக்ரமசிங்க, வற்புறுத்தியுள்ளார்.
தமிழ் பேசும் மக்களை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளவில்லையென, ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் வடக்கில், உள்ள ராணுவ மயமாக்கலை குறைக்க வேண்டுமென்றும், அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் பேசும் மக்களன்றி, தமிழர்கள் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கில் ராணுவம் மயம் இல்லையென்றும், அங்கு சிவில் நிர்வாகம் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அண்மையில் சர்வதேச நாடுகளுக்கு விளக்கமளித்திருந்தார்.
விடயங்கள் இவ்வாறிருக்கும்போது, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, தொடர்ந்தும் கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் சில சரத்துகளை குறிப்பிட்டு, சில அரச சார்ப்பற்ற அமைப்புகள் மற்றும் எல்ரிரிஈ யின் தேவைகளுக்காக விளக்கங்களை அளித்து, இலங்கைக்கு எதிராக சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவுக்கு, வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பவராக மாறியுள்ளாரென, அரசியல் ஆய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
0 comments :
Post a Comment