Wednesday, February 15, 2012

LLRC, சனல்-4 குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய புதிய நீதிமன்றம்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் கூறப்பட்டதுபோன்று இறுதிக் கட்ட யுத்தத்தில் பொது மக்கள் கொல்லப்பட்டமை மற்றும் சனல் 4 காணொளியில் காண்பிக்கப்பட்ட யுத்தக் குற்றம் போன்ற விடயங்கள் குறித்து விசாரணை நடத்த நீதிமன்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவினால் நியமிக்கப்பட்டுள்ள 5 பேர் கொண்ட இந்நீதிமன்றக் குழு ஜனவரி மாதம் 1ம் வாரம் தொடக்கம் அதிகாரம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைக்கப்பட்டுள்ள நீதிமன்ற குழுவிற்கு, தற்போதைய கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றும் மேஜர் ஜெனரல் கிறிசாந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நீதிமன்றத்தின் முதல்கட்ட நடவடிக்கைகள் நீதவான் நீதிமன்றம் ஒன்றின் அடிப்படை விசாரணைகள் போன்று இடம்பெறும் எனவும் இரண்டாம் கட்டம் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சந்தேகம் இருப்பின் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமையும் எனவும் இராணுவத் தளபதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தகுற்ற நீதிமன்றம் போன்ற மேல் நீதிமன்றுக்கு உள்ள அதிகாரங்கள் இருப்பதால் மரண தண்டனை போன்றவைகூட வழங்கப்படுவதற்கான அதிகாரம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com