கடந்த 02/02/2012 வியாழக்கிழமை SLMDI இன் உருப்பினரகளுக்கும் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் டாக்டர் கிரிஸ் நொநீஸ் அவர்களுக்குமிடையில் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது SLMDI விடுத்த அழைப்பினை ஏற்று நேற்று வெள்ளிகிழமை Crawely க்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
SLMDI இன் தலைவர் M.L நசீர் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதி உயர்ஸ்தானிகர் லினகல மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலக உத்தியோகரதர் M. இஸ்மாயீல் மற்றும் SLMDI இன் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
SLMDI உறுப்பினர் MJM. ஜெம்சீத் அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து சிறப்புரையாற்றிய அஷ்ஷைக் M.ரபீக் நளீமி , இலங்கை முஸ்லிம் புலம்பெயர் அமைப்பு பற்றிய அறிமுகத்தையும் பிரித்தானியாவில் புலம்பெயர் முஸ்லிம்களின் வாழ்வொழுங்கு பற்றியும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியான டாக்டர் கிரிஸ் நொநீஸ் தனது உரையின் போது, இலங்கையின் புலம் பெயர் மக்கள் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் கொண்டிருக்க வேண்டிய தொடர்பு பற்றி குறிப்பிட்டதுடன், புதியதோர் அபிவிருத்தி பாதையில் பயணிக்கின்ற இலங்கைக்கு புலம்பெயர் இலங்கையர் என்ற ரீதியில் ஆற்றப்பட வேண்டிய பங்களிப்புகள் பற்றியும் தெளிவுபடுத்தினார்.
இனறைய சர்வதேச சூழலில் இலங்கை முஸ்லிம் புலம்பெயர் அமைப்பானது காலத்தின் தேவை எனவும் குறிப்பிட்ட அவர், SLMDI இன் சேவைகளை பாராட்டியதுடன் அதற்கு உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக முழுப் பங்களிப்பினையும் வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறன சந்திப்புகளை தொடர்ந்து மேற்கொள்ள தான் விருப்பம் கொண்டுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் பிரித்தானியாவில் பல்வேறு இடங்களில் நடை பெறுகின்ற ஜூம்மாக்களில் கலந்து கொள்ள SLMDI சார்பில் ஏற்பாடு செய்யுமாறும் அவர் மேலும் கேட்டுகொண்டார்.
SLMDI உறுப்பினர் செய்யத் இஸ்ஸதீன் நன்றி உரை நிகழ்த்துகையில், இவ்வமைப்பானது ஒரு அரசியல் சார்ந்த அமைப்பல்ல எனவும், புலம்பெயர் முஸ்லிம்கள் தாய் நாட்டின் மீது கூடிய அக்கறையினையும் பற்றினையும் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வின் போது உயர்ஸ்தானிகர், பிரதி உயர்ஸ்தானிகர் மற்றும் SLMDI உறுப்பினர்களுக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment