இன்று யாழ் விஜயம் செய்துள்ள பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் விடயங்களை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் ஜனாதிபதியின் விஜயத்தை குழப்பும் வகையில் யாழ் உதயன் மற்றும் தினக்குரல் பத்திரிகைகள் போலியான செய்திகளை முன்பக்கத்தில் வெளியிட்டிருந்தன.
ஆனால் தமிழ் தேசியம் பேசுவதாக கூறும் மேற்படி பத்திரிகைச் செய்திகளை செவிமடுக்காத ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் நிகழ்வுகளில் ஆர்வத்துடன் கலந்திருந்தனர்.
இந்நிலையில் நிகழ்வுகளுக்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்த உதயன் பத்திரிகைச் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இன்று பத்திரிகையில் வெளியாகியிருந்த போலிச் செய்திகளை கண்டிக்கும் முகமாகவே குறித்த பத்திரிக்கையின் செய்தியாளர்கள் எவரையும் ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு அனுமதிக்கவில்லையென்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment