Tuesday, February 21, 2012

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் யாழ் வாழ்வியலை வெளிப்படுத்தும் புகைப்படக்கண்காட்சி

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் சிவில் ஒழுங்கமைப்புடன் யாழ்.வாழ்வியல் தொடர்பான புகைப்படக் கண்காட்சியென்றை இராணுவத்தினர் நடாத்தவுள்ளனர் என்று பலாலி படைத்தலைமையக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 24ம் 25ம் 26ம் திகதிகளில் மூன்று நாள் கண்காட்சியாக இக்கண்காட்சி யாழ்.பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியை காலை 10 மணி முதல் இரவு 6 மணி வரை பொது மக்கள் பார்வையிடலாம்.

இக்கண்காட்சியின் முதல் நாளை கண்காட்சியை பாதுகாப்பு அமைச்சி செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கவுள்ளார். இரண்டாம் நாளில் இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜெயசூரியவும் மூன்றாம் நாளில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறியும் ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.

இக்கண்காட்சியில் இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட யாழ்ப்பாண வாழ்வியல் மற்றும் யாழ்ப்பாண மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் 400 இற்கும் அதிகமான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

No comments:

Post a Comment