அமெரிக்காவில் உள்ள சட்டமன்ற வளாகத்தில் சந்தேகத்துக்குரிய ஒரு நபர் நடமாடியதால் போலீஸ் அதிகாரிகள் அவனை கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவனது உடம்பில் சில வெடிபொருட்களும் துப்பாக்கியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட அந்நபர் மனித வெடிகுண்டான அமின் எல் கலிபி, விர்ஜினியா பகுதியை சேர்ந்தவன் என்று தெரியவந்துள்ளது. மொரோக்கோ நாட்டை சேர்ந்த அவன் சட்டவிரோதமாக விர்ஜீனியாவில் தங்கியுள்ளான். மேலும், அவன் அல்-கொய்தா அமைப்பை சேர்ந்தவனாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இவனுடைய கூட்டாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment