நீர்கொழும்பு கடற்கரை வீதி தேவாலயத்திற்கு முன்பாக கூடியிருந்த மீனவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.
எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்ட தமக்கு இதுவரை உரிய பதில் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து, மீனவர்கள் இன்றைய தினம் மூன்றாவது நாளாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நீர்கொழும்பு கடற்கரை வீதி தேவாலயத்திற்கு முன்பாக மீனவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே அதனை களைப்பதற்கு கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து தேவாலயத்தின் மணி ஒலிக்கப்பட்டதால் அந்த இடத்தில் மக்கள் பெருமளவில் கூடியுள்ளனர்.தற்போது அங்கு பதற்றமான சூழ்நலை நிலவுகிறது.
இதேவேளை, அதிகரித்துள்ள எரிபொருள் விலைக்கேற்ப மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் டீசலுக்கு 12 ரூபா மானியமும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்க்கு 25 ரூபா மானியமும் வழங்க தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்த மானிய தொகையினை மீனவர்கள் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment