இலங்கையில் தற்போது எரிபொருள் விலையேற்றத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைகளுக்கு போராட்டம்; ஒன்றுதான் மாற்றம் தரும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். லங்காதீப பத்திரிகைக்கு விஜித ஹேரத வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாக நாடு பூரா எழுந்துள்ள நெருக்கடி நிலை தொடர்பாக கலந்துரையாடுவதற்கு அவசரமாக பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு மக்கள் விடுதலை முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது செயற்படுத்தப்படுமா?
இந்த அரசாங்கம் எந்தக் காரணமுமின்றி பெற்றோல், டீசல் விலையினைக் கூட்டியுள்ளனது. உலக சந்தையில் பெரிய அளவில் மசகு எண்ணெய்யின் விலை உயர்வடையவில்லை. உண்மையிலேயே இந்த விலையேற்றத்திற்கான முக்கிய காரணம் கடந்த காலங்களில் அரசாங்கம் மேற்கொண்ட வீண்விரையமான செயற்பாடாகும். மிஹின் லங்கா நிறுவனம். எயார் லங்கா நிறுவனம் அதேபோல தேசத்திற்கு மகுடம் கண்காட்சி போன்றவைகளுக்கு பாரியளவில் கோடிக்கானக்கான நிதி வீண்விரையம் செய்யப்பட்டுள்ளது.
மானிய அடிப்படையில் எரிபொருள் அமைச்சர்ளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று பொய்ப் பிரச்சாரப் பணிகளுக்கு கோடிக்கான நிதி வீண் விரையம் செய்யபடுகிறது. அதனால்தான் வீண்விரயம் செய்யப்பட்ட செலவீடுகளை ஈடு செய்வதற்கு வரலாற்றில் ஒரு போதும் நடக்காதவாறு பெரும் தொகைக்கு எரிபொருளின் விலை ஏற்றப்பட்டுள்ளது.
இது விவசாயிகள் கடற்தொழிலாளர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் என நாட்டிலுள்ள சகலு மக்களுக்கும் பாரிய அச்சுறுத்தலான பிரச்சினை. இதனால் வெறும் சாயத் தேனீர் கோப்பை தொட்டு எல்லாத் தரப்பினரின் சேவையாளர்களையும் தாக்கம் செலுத்தும். பொது மக்களுக்குரிய பாரிய பிரச்சினையாக எழுந்துள்ளதை அடுத்து இது தொடர்பாக கருத்துப் பரிமாரி மக்கள் பிரதிநிதிகளின் கருத்தைப் பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் தருமாறு கேட்டு சபாநாகரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி வேண்கோள் விடுத்த பேரிலும் பஸ் போக்குவரத்திற்கான கட்டணம் ரூபா 9 -20 விகிதம் கூட்டுவதற்கு தற்போது அனுமதி வழங்கி முடிந்து விட்டது. அப்படியானால் அரசாங்கம் வழங்கும் மானியக் கொடுப்பனவு போலியானதா?
எரிபொருள் விலையேற்றம் ஏற்பட்படதுடன் பொது மக்களின் எதிர்ப்பு வரும். இதில் விசேடமாக பேருந்து உரிமையாளர்களின் கடுமையான எதிர்ப்பே ஏற்பட்டது. இதனால் பேரூந்துப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அந்த பொது மக்களிடமிழுந்து எழும்பும் எதிர்ப்பினை இல்லாமற் செய்வதற்குத் தான் பொய் மானிய கதையினைக் கூறுகின்றனர்.
இதற்கு முன்னர் கடற்தொழிலாளர்கள், முச்சக்கரவண்டிக்காரர்கள் பேரூந்து உரிமையாளர்கள் ஆகியவர்களுக்கு இதைப் போல மானியம் தருவோம் என வாக்குறுதியளித்திருந்தனர். ஆனால் அதனை குழியில் போட்டு விட்டு இந்த மக்களை எதிர்ப்பினை அடிபணிய வைத்ததார்கள். ஆனால் அது சாத்தியமளிக்க வில்லை. பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. மீனவர்களும் தம் தொழிலை நிறுத்திவிட்டு வீதயில் இறங்கினர். அந்த மக்களுடைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் ஒன்றோடு தான் பேரூந்து உரிமையாளர்களுடன் கலந்துரையாடலை மேற் கொண்டனர். கடைசியாக அந்த மானியத்தை மறுதலித்து Nரூந்து உரிமையாளர்கள் கலகம் விளைத்தபோது நூற்றுக்கு 20 விகிதம் பேரூந்துக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது அது சாதாரண மக்களுக்கு பாரிய தாக்குதலாகும்.
No comments:
Post a Comment