Sunday, February 5, 2012

சாவகச்சேரியில் தாயையும் பிள்ளையும் கடத்தும் முயற்சியை முறியடித்த இராணுவத்தினர்.

ஹன்டர் வாகனத்தில் தாயையும் பிள்ளையையும் கடத்தி செல்லும் முயற்சி ஒன்று இராணுவத்தினரதும் பொது மக்களது செயற்பாட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது இன்று இரவு 8 மணியளவில் இச்சம்பவம் .மட்டுவில் பன்றித்தலை அம்மன் கோயிலடியில் இடம்பெற்றுள்ளது.

மட்டுவில் பன்றிதலைச்சி அம்மன் கோயிலடியில் வசிக்கும் பெண் ஒருவரும் அவரது சிறு பிள்ளையும் தேவை நிமித்தமாக சென்று கனகம்புளியடிச் சந்தியில் வீட்டிற்கு வருவதற்கான வாகனத்திற்காக காத்திருந்துள்ளனர்.

இந்நிலையில் நேரம் சென்றுகொண்டிருந்த நிலையிலஅங்கு வந்த ஹன்டர் ஒன்றில் அவர்கள் இருவரும் கேட்டு எறியுள்ளனர். அவர்களை ஏற்றிய ஹன்டர் வாகனம் அவர்களை உரிய இடத்தில் இறக்கிவிடவில்லை

அவர்களை கடத்திக்கொண்டு செல்ல முற்படுகையில் பிள்ளையின் சத்தம் கேட்ட அப்பகுதி பொது மக்கள் அருகிலிருந்த இராணுவ முகாமிற்கு தகவல் சொல்லியனுப்பியுள்ளனர் தன் பின்னர் இராணுவத்தினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வண்ணாத்தி பாலத்தில் இவர்களது வாகனம் இராணுவத்தினரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த பிள்ளையும் தாயும் மீட்கப்பட்டதோடு அவர்கள் இருவரையும் ஹன்டர் வாகனத்தில் கடத்தி செல்ல முற்பட்டனர் என்று சந்தேகத்தின் பெயரில் ஹன்டரிலிருந்து மூவரை சாவகச்சேரிப்பொலிஸார் கைது செய்துள்ளனர்

இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment