பஸ் பகிஸ்கரிப்பினாலும் ரயில் பயண சேவை நிறுத்தப்பட்டதாலும் மக்களுக்கு அசௌகரியம்
தனியார் பஸ்களின் சேவை பகிஸ்கரிப்பு காரணமாகவும் ,நீர்கொழும்பில் மீனவர்கள் மேற்கொண்ட வீதிமறியல் போராட்டம் காரணமாகவும் நீர்கொழும்பு நகரில் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்கள் ,தொழிலுக்கு செல்வோர் உட்பட பல்வேறு தரப்பினரும் இதன் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
எரிபொருள் விலைகளை குறைக்குமாறு மீனவர்கள் மேற்கொண்டுள்ள மறியல் போராட்டத்தை அடுத்து நகரின் பிரதான வீதிகள் உட்பட முக்கிய வீதிகள் பல ஆர்ப்பாட்டகாரர்களால் மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டதனால் வீதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது .
இதன் காரணமாக பாடசாலை மாணவர்களை நேர காலத்தோடு பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அத்துடன் பஸ் நிலையங்களில் பெரும் எண்ணிக்கையானோர். காலை முதல் பஸ்ஸுக்காக காத்திருப்பதையும் காணமுடிந்தது.
இதேவேளை, தொழிலுக்கும் ஏனைய கருமங்களுக்காகவும் பஸ் வண்டிகளிலும் ரயிலிலும் தூர இடங்களுக்கு சென்ற நீர்கொழும்பு மக்கள் தமது வீடுகளுக்கு திரும்புவதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கினர்.
நீர்கொழும்பில் மீனவர்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக சிலாபத்திற்கான ரயில் சேவைகள் இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
0 comments :
Post a Comment