தனியார் பஸ் போக்குவரத்தினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.
இதன்போது பஸ் கட்டணம் குறித்த இணக்கப்பாட்டிற்கு வந்ததாகவும் அவர் கூறினார்.
இதற்கிணங் பஸ் கட்டணம் 20 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகக் குறைந்த பஸ் கட்டணமாக 9 ரூபா அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலையேற்றம் இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வருகிறது.
No comments:
Post a Comment