ஐ.நா மனித உரிமை சபைக்கு செல்லும் அதிர்சி தரும் விவகாரம்.
பிரபாகரனின் நிலக்கீழ் மாளிகை கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதி என்ன?
புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்காக புதுக்குடியிருப்பில் ஒரு நிலக்கீழ் மாளிகை கட்டப்பட்டுள்ளது, மிகவும் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டிருக்கும் குறிப்பிட்ட மாளிகை தொடர்பான தகவல்கள் எதுவும் அது இராணுவத்தினரால் கைப்பற்றப்படும்வரை வெளியாகியிருக்கவில்லை என்பது யாவரும் அறிந்தது.
முற்றிலும் மனிதவலு கொண்டு , இயந்திரங்களின் ஆராவரங்கள் அற்று கட்டப்பட்டுள்ள இம்நிலக்கீழ் மாளிகையின் தொழிலாளர்கள் அனைவரும் விடயம் முடிவடைந்தவுடன் கொல்லப்பட்டுள்ள்னர் என்பது தற்போது கைதாகியிருக்கும் புலிகளின் புலனாய்வுத்துறையின் முக்கியஸ்தர் ஒருவரின் தகலின் ஊடாக மாத்திரம் உறுதி செய்யப்படக்கூடியதாக உள்ளதாக அறியமுடிகின்றது.
அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா வின் மனித உரிமைகள் மாநாட்டில் இவ்விடயம் இலங்கைத் தரப்பினரால் ஐ.நா வின் அவதானத்திற்கு கொண்டுவரப்படும் என நம்பப்டுகின்றது. குறிப்பிட்ட நிலக்கீழ் மாளிகையை கட்டுவதற்கான ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக அறியப்படும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெகன் என்பவரே குறிப்பிட்ட தொழிலாளர்களை நிர்வகித்ததாகவும் அவரின் அலோசனையின் பேரிலேயே தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாகவும் புலனாய்வுத்துறை உறுப்பினர் தகவல் வழங்கியுள்ளாராம்.
அத்துடன் இவ்வாறு அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் புலிகளின் நீதிமன்றினால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோரும், புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த மாற்று இயக்க உறுப்பினர்கள் மற்றும் யுத்தகளங்களில் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த இராணுவத்தினரும் அடங்கியிருந்தாக அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment