எரிபொருட்களின் விலை யேற்றத்தைத் தொடர்ந்து கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருட்களுக்கு மனியம் வழங்க கடற்றொழில் நீரியில் வளதுறை அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மாலையில் கொழும்பிலுள்ள கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற விஷேட கூட்டத்திலேயே இத்தீர்;மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையினை அரசாங்கம் அதிகரித்திருந்தது. இந்நிலையில் இதனைக் கண்டித்து மேற்கு கரையோர கடற்றொழிலாளர்கள் உள்ளிட்ட பல கடற்றொழிலாளர்கள் ஆர்பாட்டங்களையும் பகீஸ்கரிப்புக்களையும் மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கடற்றொழில் அமைச்சர் தலைமையில் இன்றைய தினம் இவை தொடர்பாக கூட்டமென்று நடைபெற்றது இதன் போது மண்ணெண்ணெய்க்கு 25 ரூபாவும் டீசலுக்கு 12 ரூபாவும் மனியமாக வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment