முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் பாரியாரான சுமனா பிரேமச்சந்திரவுக்கு ஜனாதிபதி செயலகத்தில் இணைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
.சுமனா பிரேமச்சந்ர பல தடவைகள் ஜனாதிபதியை சந்தித்து கணவரின் மறைவுக்கு பிறகு தனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக விளக்கியுள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு ஜனாதிபதி மேற்படி பதவியை அவருக்கு வழங்க தீர்மானித்ததாகவும் தெரிய வருகிறது .
நீண்ட காலம் ஜனாதிபதியுடன் நெருக்கமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாரத லக்ஷ்மனின் சேவையை கௌரவிக்கும் வகையில், அவரது மனைவிக்கு ஏதாவது பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்தின் சிரேஷ்ட அரசியல் வாதிகள் பலர் இதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment