எரிபொருள் விலை உயர்வை கண்டித்து சிலாபத்தில் மீனவர்கள் மேற்கொண்ட ஆர்பாட்டத்தின் போது துப்பபாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மீனவரின் இறுதிக் கிரியைகள் இன்று (18) இடம்பெறவுள்ளன.
இன்றைய இறுதிக் கிரியைகளின் போது கலவரத்தில் ஈடுபடக் கூடாதென சிலாபம் பதில் நீதவான் நிஸங்க நாணயக்கார உயிரிழந்த மீனவரான அந்தோனி ஜோசப்பின் நெருங்கிய ஐந்து உறவினர்களுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
. சிலாபம் பொலிஸார் நேற்றைய தினம் நீதிமன்றில் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய சிலாபம் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. எவ்வித வன்முறைகளும் இன்றி இறுதி கிரியைகளை நடத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment