Sunday, February 19, 2012

சுமந்திரனால் முடிந்தால் கிழக்குக்கு வந்து பார்க்கட்டும்! சவால் விடுக்கிறார் இனியபாரதி.

அண்மையில் இலங்கையில் எரிபொருள் விலை ஏற்றப்பட்டதை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆழும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் அவர்கள் வீட்டுக்கு போகிற வரைக்கும் போ என்று சொல்லிக்கொண்டே இருப்போம் என்று கூறியிருந்தார்.

சுமந்திரனின் இக்கருத்து தொடர்பாக கருத்துரைத்த சிறிலங்காக சுதந்திரக்கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்பாட்டாளரும், ஜனாதிபதிக்கான மாவட்ட இணைப்பாளருமான இனிய பாரதி கொழும்பில் கும்பலில் கோவிந்தா போடுவதை விடுத்து முடிந்தால் இங்கு வந்து இந்த வாய்சவடாலை விடுத்தால் அரசாங்கம் வீடுசெல்லுமா அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பு துணியில்லாமல் ஓடுமா என்பதை பார்க்கலாம் என்றார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், எரிபொருள் விலையேற்றம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொழும்பில் ஏன் கோஷம் போடுகின்றார்கள், இங்கு வந்து தமக்கு வாக்களித்த மக்களை திரட்டி இது போன்றதோர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நாடத்தி இவர்களுக்கு இங்குள்ள ஆதரவையும், அரசிற்கு உள்ள எதிர்ப்பையும் நிருபித்து காட்டவேண்டும். ஆனால் இது இவர்களால் முடியாது, தமிழ் தேசியம் என்ற போலிக்கோஷத்தினுள் ஒழிந்து நின்று இவர்கள் மக்களின் வாக்குகளை சூறையாடிக்கொண்டாலும், இவர்கள் மக்கள் மனதில் இன்னும் இடம்பிடிக்கவில்லை .

முடிந்தால் இவ்வாறனதோர் ஆர்ப்பாட்டத்தை வடகிழக்கில் நாடாத்திக்காட்டட்டும் என நான் சவால் விடுக்கிறேன் என்றார் பாரதி.

அத்துடன் வடகிழக்கில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளுக்கின்ற பல்வேறு பட்ட பிரச்சினைகள் உள்ளது. அப்பிரச்சினைகளுக்கான தீர்வைநோக்கி மக்களை அணிதிரட்டுவதை விடுத்து யாரோ திரட்டிய பேரணியில் குரல் கொடுப்பது இவர்களின் இயலாமையை வெளிக்காட்டியுள்ளது எனக்குறிப்பிட்ட அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை இனம்கண்டு அதற்கான தீர்வினை தேட முனையவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment