சென்னை வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நேற்று நடந்தது. இதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்துகொண்டு புதிய சப்-இன்ஸ்பெக்டர்களின் பிரமாண்டமான அணிவகுப்பை பார்வையிட்டார்.
பின்னர் அவர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உரையாற்றினார். அப்போது அவர், கொலைகாரர்களையும், கொள்ளைக்காரர்களையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் சட்டம்-ஒழுங்கு பராமரிக்கும் பணியினை நீங்கள் மேற்கொள்ளும் போது, சட்டம் மனித சேவைக்காக உருவாக்கப்பட்டது தான் என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். மனித நேயத்தை மறந்து சட்டப்படி நடப்பது சரியாக இருக்காது. எனவே, மனிதாபிமானத்துடன் போலீசார் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.
No comments:
Post a Comment