Saturday, February 11, 2012

குற்றவாளிகளுக்கான மரண தண்டனையை நீதிபதிகள் உறுதிப்படுத்தினர்.

2003ஆம் ஆண்டு மும்பையில் உள்ள கேட் வே ஆஃப் இந்தியா என்ற புகழ்பெற்ற நினைவுச் சின்னத்திற்கு அருகிலும் நகைகள் விற்கும் சந்தை ஒன்றிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 53 பேர் கொல்லப்பட்டும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தும் இருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை மும்பை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.

பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் லஷ்கர் இ-தொய்பா என்ற பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்து இந்தக் குண்டு வெடிப்புகளை திட்டமிட்டதாக ஒரு தம்பதியர் உட்பட மூவர் பேரை குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு வழங்கி அவர்களுக்கு தூக்குத் தண்டனைக்கு உத்தரவிட்டார்.

இத்தீர்ப்பை மும்பை சிறப்பு நீதிமன்றம் ஆகஸ்ட் 2009 வழங்கியது.

இதனை தொடர்ந்து இந்த இரட்டை கார்க் குண்டுத்தாக்குதல் மீதான விசாரணைகள் நேற்று மும்பை உயர் நீதிமன்றத்தில் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் பி.டி.கோடே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொல்லப்பட்டது.

இருதரப்பு விவாதங்களின் அடிப்படையில் சதி திட்டம், தீவிரவாத செயல் மற்றும் கொலை ஆகிய மூன்று அடிப்படை காரணங்களுக்காக அஷ்ரட் ஷவிக் அன்சாரி, ரஹீம் சய்ட் மற்றும் அவரது மனைவி பாமிடா சய்ட் ஆகியோருக்கு விதிக்கபட்ட மரண தண்டனையை நீதிபதிகள் உறுதிப்படுத்தினர்.


No comments:

Post a Comment