இலங்கைக்கு வருகைதரும் உல்லாசப்பயணிகளின் எண்ணிக்கை அதிகாரிப்பு
இலங்கைக்கான உல்லாசப்பயணிகளின் வருகை எண்ணிக்கையானது கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது சடுதியாக அதிகாரித்திருப்பதாக உல்லாசப்பயண அபிவிருத்தி அதிகார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் மட்டும் 85 ஆயிரத்து 874 பேர் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளாக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இத்தொகையானது 15.7 சதவீத அதிகாரிப்பாகும் என உல்லாசப்பயண அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை மேற்கு நாடுகளிலிருந்து 36 ஆயிரத்து 497 பேர் உல்லாசப்பயணிகளாக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
கிழக்காசிய நாடுகளிலிருந்தும் இங்கு வருகைதந்துள்ள உல்லாசப்பயணிகளின் எண்ணிக்கையும் உச்சப்பெறுமதி ஒன்றை காட்டி நிற்பதோடு அது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 28.4 சதவீத வளர்ச்சியைக்காட்டிநிற்பதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment