காதலர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் கலைஞர்களின் படைப்பாக காதல் மொழி எனும் பாடல் வெளிவந்துள்ளது. தமிழ் மொழியை காதலிப்பதாக அமைந்துள்ள இப்பாடல் நவீன தொழில்நுட்ப தரத்துடன் அதி உயர் வடிவத்தில் (1080p Full HD) நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளமை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இளம் இசையமைப்பாளர் SJ ஸ்ரலின் பாடலின் வரிகளை எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். கடந்தவருடம் இவரது இசையில் வெளிவந்த தண்ணீர் குறும்படம் சிறந்த இசைக்கான விருதினை பெற்றிருந்ததோடு, இவரது அண்மையில் வெளிவந்த ‘தமிழ் கொலைவெறி யாழ்ப்பாணப் பதிப்பு’இசைக்காணொளி உலகம் பூராகவும் பலரது வரவேற்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ் இசைக்காணொளியை யாழ்-மியூசிக் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இக் காணொளி யாழ்-மியூசிக் நிறுவனத்தின் இரண்டாவது படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment